சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

Update: 2023-09-24 18:45 GMT

பனைக்குளம்

ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகர் நடுத்தெருவில் உள்ள தேவர் நகர் சித்தி விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றது. விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, பூத சுத்தி தனபூஜை, சோமகும்பா பூஜை, கோபூஜை, நாடி சந்தனம், ஸ்பரிசாகுதி திரவியா, குதிஹோமம், 2-ம் கால பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜை நடந்தது.

நேற்று மேளதாளங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாடுகளை எம்.எஸ்.கே. நகர், தேவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்