செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

Update: 2024-12-13 03:02 GMT

சென்னை,

சென்னையில் நேற்று முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் நேற்று 14 செ.மீ மழை பதிவானது. இதன்காரணமாக ஏரிக்கு நேற்று காலை 743 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது விநாடிக்கு 6998 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 21.50 அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை கடந்துள்ளது.24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடியை நீர்மட்டம் கடந்ததை அடுத்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக முதல் கட்டமாக ஐந்து கண் மதகிலிருந்து இரண்டு மற்றும் நான்கு ஆகிய செட்டர்களில் இருந்து ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வழுதலம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.உபரி நீர் திறப்பதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்