உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தனுஷ் வாழ்த்து
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை,
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப், தொடரின் இறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன
இந்த நிலையில், குகேஷுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
குகேஷ் உலக செஸ் சாம்பியனானது இந்தியாவிற்கும் , சென்னைக்கும் பெருமையான தருணம். வாழ்த்துகள் குகேஷ், இந்தச் சாதனையின் மூலம் எங்கள் அனைவருக்கும் ஊக்கம் அளித்து பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.என தெரிவித்துள்ளார் .