காட்சி பொருளான சுகாதார வளாகம்

லக்கிநாயக்கன்பட்டியில் காட்சி பொருளாக சுகாதார வளாகம் இருந்து வருகிறது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Update: 2022-09-25 18:45 GMT

மூங்கில்துறைபட்டு, 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்கிநாயக்கன்பட்டியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனபின்பும் இது வரை பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகம் யாருக்கும் பயனின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. மேலும் கட்டிடமும் சேதமடைந்து வருவதால் அரசு பணம் வீணாகி வருகிறது. சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி இயற்கை உபாதையை பொது இடங்களில் கழித்து வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

நடவடிக்கை

இது குறித்து புகார் அளித்தும் சுகாதார வளாகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதற்குதான் அரசு இதுபோன்ற சுகாதார வளாகத்தை கட்டி வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியதால் அதன் நோக்கமே சிதைந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ருப்தி அடைந்துள்ளனர். எனவே இதை தவிர்க்க சுகாதார வளாகத்தை சீரமைத்து விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்