வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

திருத்தணி அருகே வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-01-26 14:41 IST

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 52). அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமான கடையை சென்னை குமரன் நகரை சேர்ந்த லச்சுமணகுமார் என்பவருக்கு டாஸ்மாக் கடை நடத்த வாடகைக்கு விட்டார். 11 மாதம் லச்சுமணகுமார் சரியாக வாடகையை குமாரசாமியிடம் கொடுத்தார்.

அதன் பிறகு வாடகை சரிவர கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து குமாரசாமி லச்சுமணகுமாரிடம் கேட்டதற்கு ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி திருத்தணி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த லச்சுமணகுமார், விநாயகம், கெங்காதரன், கிருஷ்ணமூர்த்தி, மனோகர், பெரிய வேலு, சின்ன வேலு ஆகியோர் மீது புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்