சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; பூசாரிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-07-29 19:07 GMT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பூசாரிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பாலியல் தொந்தரவு

மதுரை அனுப்பானடி சின்னகண்மாய் சி.எம்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து உள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர்.

5 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு விசாரணை மதுரை போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். விசாரணை முடிவில், ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதனால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமாரவேல் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்