பழைய அரசு மருத்துவமனை சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பழைய அரசு மருத்துவமனை சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-07-25 19:07 GMT

கரூர் பழைய அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள சாலையில் ஏராளமான கடைகள், அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் உள்பட பலர் இவ்வழியாக சென்று வருகின்றனர். இந்தநிலையில் பழைய அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து பல நாட்களாக கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராமல் கழிவுநீர் பொதுமக்கள் மீது தெளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வழிந்தோடும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவுநீர் வெளியேறும் வடிகாலை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்