சேவூர் அரசுக்கு பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

Update: 2023-06-12 13:11 GMT


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர். மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி ததும்ப முகத்தில் புன்னகையுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி, உதவி தலைமையாசிரியர் தனசேகரன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பூ மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பளிப்பு அளித்தனர். இதை தொடர்ந்து பணியிட மாறுதலாகி பள்ளிக்கு புதிதாக வந்த நான்கு ஆசிரியர்களை தலைமையாசிரியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறும்போது " பள்ளி திறக்கப்படுவதையொட்டி பள்ளி வளாகம், வகுப்பறைகள், குடிநீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதுவரை 6, 9, 11 -ம் வகுப்புகளுக்கு 200 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் புத்தகம் நோட்டுகள் வழங்கப்பட்டது என்றனர்.

மேலும் செய்திகள்