மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு

ஆரணியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-06-26 12:28 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி எல்.கே.ஜமுனா மேற்பார்வையில் ஆரணி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எ.தாவூதாம்மாள், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.டி.சதீஷ்குமார், நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு வக்கீல் கே.ஆர்.ராஜன் வரவேற்றார்.

மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், சிறு வழக்குகள் உள்ளிட்ட 354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 35 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதில் அரசு வக்கீல் ராஜமூர்த்தி, வக்கீல் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, முன்னாள் அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்