மக்கள் நீதிமன்றத்தில் 243 வழக்குகளுக்கு தீர்வு

திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 243 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.1¾ கோடி வசூல் செய்யப்பட்டது.

Update: 2022-08-14 18:16 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 243 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.1¾ கோடி வசூல் செய்யப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர், மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு) நீதித்துறை நடுவர் அருண் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல்பொற்செழியன், அரசு வக்கீல் பாஸ்கர், வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலர் ஹரிபாஸ்கர் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இதில் 4 காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட 171 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.8 லட்சத்து 47 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அய்யப்பன் பிள்ளை தலைமையில் நடைபெற்றது. மன்னார்குடி வட்டாரத்தில் நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 843 வழக்குகளில் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் வங்கி தொடர்பான வழக்குகள் 34, மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகள் 28, காசோலை மோசடி தொடர்பான வழக்குகள் 3 என 72 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தீர்வு தொகையாக ரூ.1 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழு வக்கீல் கலையரசி, அரசு வக்கீல்கள் கலைவாணன், அன்புச்சோழன், இளஞ்சேரன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை நிர்வாக உதவியாளர் ஜோதிநாதன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்