எள் அறுவடை பணி தீவிரம்

கூடலூரில் எள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-02 18:45 GMT

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ஒட்டிய பகுதிகளான ஏகலூத்து, பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் விவசாயிகள் எள், தட்டைப்பயறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்திருந்தனர். இதில் அதிக நிலப்பரப்பில் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எள் பயிர் பூக்கள் விட தொடங்கியதும் விவசாயிகள் களை பறித்தும், மருந்துகள் தெளித்தும் பயிரை நன்கு பராமரித்து வந்தனர். இந்நிலையில் தற்போது எள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக எள் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. 100 கிலோ எடையுள்ள ஒரு குவிண்டால் எள் ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்