குறிச்சிக்கோட்டை-ஜல்லிப்பட்டி இணைப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிச்சிக்கோட்டை-ஜல்லிப்பட்டி இணைப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-31 10:42 GMT

தளி

குறிச்சிக்கோட்டை-ஜல்லிப்பட்டி இணைப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

பயண நேரத்தை குறைத்து எரிபொருள் செலவை மிச்சப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை அளிப்பதில் புறவழிச்சாலையின் பங்கு முக்கியமானதாகும். பிரதான சாலைகளில் புதுப்பித்தல், சீரமைத்தல், பழுதுபார்த்தல் பணி நடைபெறும் போது போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பது புறவழிச் சாலைகள். அதை உணர்த்தும் விதமாக திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களை இணைக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் இருந்து நெய்க்காரப்பட்டி, கொழுமம், குமாரலிங்கம், எரிசனம்பட்டி, தேவனூர் புதூர், நா.மூ.சுங்கம் வழியாக ஆனைமலை சென்றடையும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாலையின் வழியாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் சாலையின் அருகாமையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு பணிகளுக்காக இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் குறிச்சிக்கோட்டை-ஜல்லிபட்டிக்கு இடைப்பட்ட ஓனாக்கல்லூர் அருகே வளைவு பகுதியில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பால் இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக விட்டது. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

சீரமைக்க வேண்டும்

குறிச்சிக்கோட்டை- ஜல்லிபட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் புறவழிச்சாலையின் ஓரத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஏராளமான குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் சாலையில் தேங்கியுள்ள அசுத்தநீர் உடைப்பின் வழியாக குடிநீருடன் கலந்து சென்று பொதுமக்களுக்கு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது. வளைவுப்பகுதியில் சேதமடைந்த இந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதே பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால் தரமற்ற சீரமைப்பு பணியால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிச்சிக்கோட்டை- ஜல்லிபட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பையும் சேதமடைந்த சாலையையும் சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தையும் பொதுமக்களுக்கு சுகாதாரமான தண்ணீரையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

---

குறிச்சிக்கோட்டை- ஜல்லிபட்டி இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்