வெறிநாய் கடித்து பெண் படுகாயம்
பாலக்கோடு அருகே வெறிநாய் கடித்து பெண் படுகாயம் அடைந்தார்.
பஞ்சப்பள்ளி அருகே நமாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது45). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் அவரை கடித்து குதறியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிக்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.