பட்டுப்புழு வளர்ப்பு வருமானத்தை அளிக்கக்கூடிய தொழிலாக உள்ளது-கலெக்டர் பேச்சு

பட்டுப்புழு வளர்ப்பு வருமானத்தை அளிக்கக்கூடிய தொழிலாக உள்ளது என கலெக்டர் கூறினார்.

Update: 2022-08-18 18:58 GMT

பெரம்பலூரில், மாவட்ட விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது தொடர்பான கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்கினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்து வெண்பட்டு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கி பேசுகையில், தனிமனித வருமானத்தை பெருக்க கூடிய அளவில் குறிப்பாக சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பட்டு வளர்ச்சி துறையில் பல்வேறு பயிற்சிகள் உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பட்டு வளர்ச்சி என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. ஒரு வருடத்தில் 10 மாதங்களுக்கு உங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும். குறிப்பாக தற்போதைய காலக்கட்டத்தில் மனித வேலைகள் குறைந்துள்ளது. பட்டு புழுக்களுக்கு உணவளிக்கும் முறைகள் அது வளரும் விதம் ஆகியவை முழுமையாக மாற்றமடைந்துள்ளது. எனவே உறுதியாக பட்டுப்புழு வளர்ப்பு தொழில் என்பது வருமானத்தை அளிக்கக்கூடிய தொழிலாக உள்ளது என்றார். கருத்தரங்கில் மத்திய பட்டு வாரிய இயக்குனர் பாபுலால், துணை இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்