செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்ட விரோதம் : அதிமுக நிர்வாகிகள் பேட்டி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்ட விரோதம் என்று ஆளுநரை சந்தித்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேட்டி அளித்தனர்.

Update: 2023-06-15 12:40 GMT

தமிழகத்தில் மத்திய விசாரணை அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் நடத்திய அடுத்தடுத்த சோதனைகள், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரசச்னை, செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சி.வி.சண்முகம் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து அவர் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் நீக்கியிருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். 'ஏன் முதலமைச்சர் இந்த அளவுக்கு இறங்கி வருகிறார்? செந்தில் பாலாஜியை முதலமைச்சர் காப்பது தவறான செயல். கனிமொழி கைது செய்யப்பட்டபோதுகூட வருத்தப்படாத முதல்வர், ஏன் செந்தில் பாலாஜிக்காக இறங்கி செல்கிறார்?' என்றும் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்