சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி மூட்டைகள் நாமக்கல் அனுப்பி வைப்பு

சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி மூட்டைகள் நாமக்கல் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-10-07 18:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி ஆலைகளில் நெல் அரவை செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் நாமக்கல் மாவட்டத்திற்கு சரக்கு ரெயில் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிறுத்தும் இடத்தில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள், வேகன்களில் ஏற்றினர். மொத்தம், 1,250 டன் அரிசி மூட்டைகள் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்