உயிர்வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கு
தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் உயிர்வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல் துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி.சந்திரசேகர் தலைமை தாங்கினார். உயிர்வேதியியல் துறைத்தலைவர் இரா.பெரியசாமி வரவேற்றார்.
அறிவியல் மனித வாழ்க்கைக்கான இதய நிலை என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியை எஸ்.யாமினி சுதாலட்சுமி, சென்னை பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை உதவ பேராசிரியை பி.சுகந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் எஸ்.தேவபர்வதம், வி.ரஞ்சனி, உடற்கல்வி இயக்குனர் மோகனவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் கல்லூரி உதவி பேராசிரியை பெ.பெத்தம்மாள் நன்றி கூறினார்.