சென்னையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

சென்னையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற புகாரில், 3 பணியாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-27 14:32 GMT

சென்னை,

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த புகாரில் 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட இடங்களில் டாஸ்மாக் மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் கடை மேற்பார்வையாளர் உட்பட 3 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்