தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை நடந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.3,200-க்கு விற்பனையானது.

Update: 2022-09-06 20:32 GMT

ஆரல்வாய்மொழி, 

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் விடிய, விடிய பூக்கள் விற்பனை நடந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.3,200-க்கு விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்

குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளையில் பூ மார்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. அதிகாலையில் இருந்தே பூக்கள் விற்பனை நடைெபறும். ஓணம் பண்டிகை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் மலையாள மொழி பேசும் மக்கள் வீடுகளில் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு வருகிறார்்கள்.

அத்தப்பூ கோலத்திற்கு வண்ணப்பூக்களையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். வாடாமல்லி, சிவப்பு கேந்தி, மஞ்சள் கேந்தி, வெள்ளை சிவந்தி, வெள்ளை ரோஜா, சிகப்பு ரோஜா, அரளி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி விற்பனைக்காக 1 மாதத்திற்கு முன்பே பூக்களை வெளிமாவட்டத்தில் உள்ள ஊர்களில் தோவாளை வியாபாரிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

ஓணம் பண்டிகை தொடங்கிய நாளிலிருந்து தினமும் சுமார் 50 டன் பூக்கள் விற்பனையாகி வருகின்றன.

விடிய, விடிய விற்பனை

பொன் ஓணம் என்று சொல்லகூடிய ஓணம் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தோவாளை மார்க்கெட்டுக்கு நேற்று காலையில் இருந்தே பூக்கள் வந்து குவிந்தன.

திருவோணம் பண்டிகையையொட்டி நேற்று இரவு 10 மணி முதல் பூக்கள் விற்பனை விடிய, விடிய நடந்தது. இதனால் தோவாளை மார்க்கெட்டில் குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல், கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இரவு மட்டும் 300 டன் பூக்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலான பூக்கள் நள்ளிரவுக்குள் விற்பனையானது. இன்று (புதன்கிழமை) மதியம் வரை மேலும் 200 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி ெ்மாத்தம் 500 டன் பூக்கள் விற்க வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

மல்லிகைப்பூ ரூ.3,200

பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.1,400-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.1,800 உயர்ந்து ரூ. 3,200-க்கும், ரூ.600-க்கு விற்பனையான பிச்சி ரூ.800 உயர்ந்து ரூ.1,400-க்கும் விற்பனையானது. அதே போல் ரூ.500-க்கு விற்பனையான முல்லை ரூ.750 உயர்ந்து ரூ.1,250-க்கும் விற்கப்பட்டது.

மற்ற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.300, சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.200, கோழிப்பூ ரூ.80, பச்சை ரூ.8, ரோஸ்(100 எண்ணம்) ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.150, ஸ்ெடம்புரோஸ் (1 கட்டு) ரூ.280, மஞ்சள்கேந்தி ரூ.80, சிவப்பு கேந்தி ரூ.100, சிவந்தி (மஞ்சள்) ரூ.250, சிவந்தி (வெள்ளை) ரூ.350, கனகாம்பரம் ரூ.1000, தாமரை ரூ.5, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.30 என விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்