தேசிய வருவாய் வழி- திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு
தேசிய வருவாய் வழி- திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு
திருத்துறைப்பூண்டியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 459 மாணவர்கள் எழுதினர்.
459 மாணவர்கள் தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்்த தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் தேர்வை ஆர்வத்துடன் எழுதினர். காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனதிறன் தேர்வும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை 459 மாணவர்கள் எழுதினர். தேர்வினை மாணவர்கள் ஓ.எம்.ஆர். சீட்டில் எழுதினர்.
ரூ.ஆயிரம் உதவித்தொகை
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டு 9 வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கும்.
இந்த உதவித்தொகை 12-ம் வகுப்பு படிக்கும் வரை வழங்கப்படும்.