நாகரசம்பட்டி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்

Update: 2022-09-28 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி வருவாய் ஆய்வாளர் லதா மற்றும் அதிகாரிகள் காவாப்பட்டி கூட்டு ரோடு அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் மண் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, அந்த மண் காவாப்பட்டி ஏரியில் இருந்து நாகரசம்பட்டிக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரி லதா கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்