சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளை மற்றும் நீரின்றி அமையாது உலகு அமைப்பு சார்பில் காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவில் உள்ள பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். நீரின்றி அமையாது உலகு அமைப்பின் பொறுப்பாளர் கனல்முனீஸ் முன்னிலை வகித்தார். முன்னதாக காளையார்கோவில் கிளை இணை செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். உலகம் வெப்ப மயமாவதை தடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும், மனித இனம் மற்றும் விலங்கினத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. இதில் வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.