திருப்புவனம்,
கீழடி ஊராட்சியில் உள்ள பசியாபுரம் கிராமம் அருகே சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை சங்கமும், கீழடி ஊராட்சி மன்ற மகளிர் குழுவும் இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய மக்களமைப்பு நிர்வாகி ஜெயக்கொடி அனைவரையும் வரவேற்றார்.
இதையொட்டி சங்க செயலாளர் பிரிட்டோ ஜெயபாலன் முன்னிலையில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து. மரங்களின் பயன்பாடுகள் குறித்து மதுரை நிழல்கள் நண்பர் குழுவும், கீழடியை சேர்ந்த கவுரி, தாமரைச்செல்வி ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் நன்றி கூறினார்.