வாடகை செலுத்தாதல் ரூ.2 கோடியே 97 லட்சம் பாக்கி: பஸ் நிலையத்தில் 12 கடைகளுக்கு 'சீல்' :கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால் 12 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2023-09-15 18:45 GMT


கள்ளக்குறிச்சியில் உள்ள அண்ணா பஸ் நிலையம் மற்றும் பஸ்கள் வெளியே வரும் வழி ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் உள்ளது. இதில் சுமார் 60 கடைக்காரர்கள் முறையாக வாடகை பணம் செலுத்தாமல் ரூபாய் 2 கோடியே 97 லட்சம் வரையிலும் பாக்கி வைத்துள்ளனர். இதில் ஒருசில கடைக்காரர்கள் ஒரு வருடம், 10 மாதம், 8 மாதம் என்கிற கால இடைவேளியில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். நகராட்சி சார்பில் பலமுறை வாடகை பாக்கி கேட்டும் கடைக்காரர்கள் செலுத்தவில்லை.

கடைகளுக்கு 'சீல்'

இதையடுத்து, நேற்று நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகராட்சி உதவி வருவாய் அலுவலர் ரவி மற்றும் வருவாய் உதவியாளர் பணியாளர்கள் நேற்று பஸ்நிலையம் பகுதிக்கு வந்தனர். அங்கு, அதிக மாதங்கள் வாடகை செலுத்தாமல் இருந்தவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி மொத்தம் 17 கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைக்கப்பட்டது.

இதற்கிடையே 5 கடைக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட மாத வாடகை தொகையை செலுத்தியதால், அவர்களது கடைக்கு வைக்கப்பட்ட சீல் மட்டும் அகற்றப்பட்டது.

மேற்கொண்டு வாடகை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தவில்லை என்றால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்