மெடிக்கலுக்கு சீல் வைப்பு

சுரண்டை அருகே மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2023-08-25 20:31 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே கழுநீர்குளம் மெயின் ரோட்டில் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார். இங்கு மருந்து விற்பனையை தவிர அலோபதி மருத்துவம் பார்ப்பது, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்வது போன்றவையும் நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதார துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குநர் பிரேமலதா நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சிகிச்சை அளிப்பது, காயத்துடன் வருபவர்களுக்கு தையல் போட்டு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மெடிக்கல் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சுரண்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருள்ஜோதி, வருவாய் ஆய்வாளர் மாலினி, கிராம நிர்வாக அலுவலர் சேர்மப்பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் அருண், ஆனந்தராஜ் மற்றும் வீரகேரளம்புதூர் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்