என் சி சி மாணவர்களின் கடல்வழி சாகச பயணம்

கடலூரில் என் சி சி மாணவர்களின் கடல்வழி சாகச பயணம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-06-09 17:01 GMT

கடலூர்

என்.சி.சி. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி என்.சி.சி. குழுமம் சார்பில் ஆண்டுதோறும் கடல்வழி சாகச பயணம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு " சமுத்திரகமன் 2022" என்ற பெயரில் கடல்வழி சாகச பயணத்தை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.இந்த சாகச பயணத்தில் 35 என்.சி.சி. மாணவர்களும், 25 என்.சி.சி. மாணவிகளும் கலந்து கொண்டனர். இந்த சாகச பயணம் புதுச்சேரியில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைகிறது. இந்த குழுவினர் 27 அடி நீளம் கொண்ட படகில் பயணம் செய்கின்றனர். இந்த சாகச பயண குழுவினர் கடலூர் முதுநகர் வந்தனர். இந்த குழுவுக்கு என்.சி.சி. குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சாகச குழுவை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த குழு பரங்கிப்பேட்டை வழியாக பூம்புகார், காரைக்கால் நோக்கி சென்றது. செல்லும் போது, ரத்த தான முகாம். கடற்கரை தூய்மை பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற விழிப்புணர்வும், ஸ்கூபா டைவிங் போன்ற சாகச போட்டிகளும் நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்