பாம்பன், தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

பாம்பன், தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

Update: 2022-07-12 18:12 GMT

ராமேசுவரம், 

தென்மேற்கு பருவக்காற்று தற்போது வீசி வருவதால் நேற்று பாம்பன் பகுதியில் திடீரென சூறாவளி காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் அந்தப் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மீன்துறை அலுவலகத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் பாம்பன் பகுதியில் உள்ள அனைத்து படகுகளும் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதே போல தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்