சாரணர் இயக்க பயிற்சி முகாம்

சாரணர் இயக்க பயிற்சி முகாம் நடந்தது

Update: 2023-10-13 18:45 GMT

சிவகங்கை கல்வி மாவட்ட சாரண இயக்கம் சார்பாக திருத்திய சோபன் பயிற்சி முகாம் ஒக்கூரில் நடைபெறுகிறது. முகாம் தொடக்க விழா மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. புனித ஜோசப் பள்ளி முதல்வர் ஜோஸ்பின் சகாயசீலி வரவேற்றார். மாவட்ட செயலர் முத்துக்குமரன் முகாம் அறிக்கை வாசித்தார். மாவட்ட அமைப்பு ஆணையர் நரசிம்மன் தொகுத்து வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் சிவகங்கை கல்வி மாவட்டம் சார்பாக வெளியிடப்பட்ட சாரண கையேட்டினை வெளியிட அதை மாவட்ட தலைவர் நல்லாசிரியர் புவனேஸ்வரன், கவுரவ தலைவர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் பெற்று கொண்டனர். இதில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 228 சாரணர்கள், 68 சாரணியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தலைமை பயிற்றுனர்கள் மெக்பூக்கான், நான்சி, வன்னிச்செல்வம், குமார், முத்து காமாட்சி, இந்திராகாந்தி ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்