மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி
சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி நடந்தது.
சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் இல்லம் தேடிகல்வி திட்டத்தில் அறிவியல் பயிற்சி ஊராட்சி வாரியாக அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யாபட்டி அரசு நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பயிற்சியின்போது பலூன் ராக்கெட், காற்று அழுத்தம், பெர்னூலிஸ் தத்துவம், கணித புதிர்கள் உள்ளிட்ட பரிசோதனைகள் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஜார்ஜ் ஆரோக்கியதாஸ், வின்சென்ட் பால்ராஜ், ஆசிரியைகள் பரமேஸ்வரி, வளர்மதி, இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குரு பிரசாத், ஆசிரியர் பயிற்றுனர் கணேசன், பொறுப்பாசிரியர் மாறவர்மன், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.