நாளை பள்ளிகள் திறப்பு- முதல் ஒரு வாரத்துக்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன

Update: 2022-06-12 06:14 GMT

சென்னை:

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க  உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பள்ளிக் கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வகுப்புகள் தொடங்கப்பட்டு முதல் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்