பள்ளி ஆசிரியை மாயம்

பள்ளி ஆசிரியை மாயமானார்.

Update: 2023-07-09 18:23 GMT

கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் பிரியா (வயது 24). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரியா வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து பிரியாவின் பெற்றோர் அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரியாவின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து, மாயமான பிரியாவை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்