சிவகங்கை
சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் 16 வயது மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு நண்பரான 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென அவர்கள் இருவரையும் காணவில்லை எனக்கூறப்படுகிறது. அவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து இவர்களுடைய பெற்றோரும் சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.