கோவில்பட்டியில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்: சுதந்திர தின விழாவுக்கு சென்று திரும்பிய பள்ளி மாணவர் பலி

கோவில்பட்டியில் சுதந்திர தின விழாவுக்கு சென்று விட்டு திரும்பியபோது, மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவர் பலியானார்

Update: 2022-08-15 17:54 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் சுதந்திர தின விழாவுக்கு சென்று விட்டு திரும்பியபோது, மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவர் பலியானார்.

பள்ளி மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (வயது 15). இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஸ்ரீபுஷ்பராஜ் நேற்று காலை சுதந்திர தின கொடியேற்று விழாவுக்காக மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். பின்னர் காலை 11 மணிக்கு மேல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளுடன், மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

பலி

இதில், மாணவர் ஸ்ரீபுஷ்பராஜூம், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த சங்கனப்பேரியை சேர்ந்த இறைவன் (40) என்பவரும் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீபுஷ்பராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறைவனுக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தின விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்