ஊராட்சி தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு‌ பயிற்சி

கீழ்வேளூர் ஊராட்சி தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு‌ பயிற்சி நடந்தது.

Update: 2022-12-15 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில், ஊராட்சி தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு‌ பயிற்சி நடைபெற்றது. கீழ்வேளூர் ‌வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் பயிற்சியை தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், மேலாண்மை குழு செயல்பாடுகள், பள்ளி வளர்ச்சியில் அதன் பங்கு குறித்து விளக்கம் அளித்தார். இதில் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா, ஆசிரியர் பயிற்றுனர் துர்கா, ஊராட்சி ஒன்றிய பயிற்சியாளர் அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்