பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம் ஆனார்

Update: 2023-01-08 18:47 GMT

தோகைமலை அருகே கள்ளை காலனியை சேர்ந்தவர் ரெத்தினவேல். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியின்மகள் தவமணி (வயது 16). இவர் பேரூர் உடையாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரியம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தவமணியை காணவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் ேதடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான தவமணியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்