கண்டகானப்பள்ளி அரசு பள்ளியில் ஆண்டு விழா

Update: 2023-04-06 19:00 GMT

ராயக்கோட்டை:

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்டகானப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணப்பா வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் மகாதேவன் ஆண்டறிக்கை வாசித்தார். இதையடுத்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, கிருஷ்ணதேஜஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினர். இதில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்