திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயர் கைது

என்ஜினீயர் கைது

Update: 2022-09-19 20:26 GMT

கவுந்தப்பாடி அருகே திருமணம் செய்வதாக கூறி காதலியை ஏமாற்றிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

திருமணத்துக்கு மறுப்பு

கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் ஒருவரும், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் என்ஜினீயர் பிரபு (30). என்பவரும் கடந்த 4 அண்டுகளாக காதலித்து வந்தாக தெரிகிறது.

இந்தநிலையில் பிரபுவிடம் அந்த பெண் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு பிரபு மறுத்து வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக தெரிகிறது.

கைது

இதையறிந்த அந்த பெண் பிரபுவிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு பிரபு தனது உறவினர்களுடன் சேர்ந்து பெண்ணை தகாத வார்த்தையால் பேசியதாகவும், கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான பெண் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரபுவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்