சாத்தான்குளம், தட்டார்மடம் போலீஸ் நிலையங்களில் தூய்மைப்பணி
சாத்தான்குளம், தட்டார்மடம் போலீஸ் நிலையங்களில் தூய்மைப்பணி நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம், தட்டார்மடம் போலீஸ் நிலையங்களில் நேற்று முன்தினம் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அலுவலகம், சுற்றுப்புற பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட போலீசார் ஈடுப்பட்டனர்.
இதேபோல் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் புவுலோஸ் தலைமையில் போலீஸ் நிலைய அலுவலகம், வளாகம், சுற்றுப்புற பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெல்சன், பென்சன், குரூஸ்மைக்கேல் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.