சர்வோதய சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பத்தூர் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சர்வோதய சங்கம் சார்பில் காந்திஜெயந்தி விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செயலாளர் லோகேஸ்வரன் தலைமை தாங்கி,காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தலைவர் செல்வ திருப்பதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வக்கீல் எஸ்.எஸ்.மணியன் கலந்து கொண்டு சர்வோதய சங்க ஊழியர்கள், நூல் நூர்ப்போர் மற்றும் கதர் நெய்வோர், பணியாளர்கள் ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனை எதிரே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு செயலாளர் பேசுகையில் இந்த ஆண்டு ரூ.3கோடியே 40 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் மிகவும் அன்புடன் பழகி இலக்கை கண்டிப்பாக அடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.