உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்

உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-11-29 19:37 GMT

மாவட்டத்தில் தமிழ்நாடு நீடித்த விவசாய நிலத்தில் பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வினியோகம் செய்ய அனைத்து வட்டாரங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஒரு எக்டேருக்கு 160 மரக்கன்றுகளும், அடர் நடவு செய்வதாக இருந்தால் ஒரு எக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதிகபட்சமாக 2 எக்டேருக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இதற்கு விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விவசாயி தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார். பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக பெற்று நடவு செய்யலாம். முன்னுரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்