தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

பொள்ளாச்சியில் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பா.ஜனதாவினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-02 19:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பா.ஜனதாவினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணி நீக்கம்

பொள்ளாச்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 69 பேர் நிரந்தரமாகவும், 270 பேர் ஒப்பந்தத்திலும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் சுகாதார பணிகள் தனியார் மயமாக்கப்பட்டது. இதனால் ஒப்பந்தத்தில் பணியாற்றிய 140 பேரை பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதை கண்டித்து நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விடிய, விடிய போராட்டம் நடந்தது.

2-வது நாளாக...

இதற்கிடையில் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு தூய்மை பணியாளர்கள் மனு கொடுக்க வந்தனர். பின்னர் 2-வது நாளாக அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் தூய்மை பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். எனினும் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

இதற்கிடையில் அவர்களுக்கு, ஆதரவு தெரிவிக்க வந்த பா.ஜனதாவினர் 7 பேரை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்தனர். மேலும் சப்-கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவை மூடினர்.

Tags:    

மேலும் செய்திகள்