தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-12-23 18:59 GMT

தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டி.பி.சி. பணியாளர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.5,140 ஊதியம், பணியாளர்களுக்கு ரூ.4,300 ஊதியம், சிறப்பு கால ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கு பஞ்சப்படியுடன் சேர்த்து ரூ.8,500 ஊதியம் வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்