வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

புத்தூர் வடிகால் வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு எற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-05 18:45 GMT

கொள்ளிடம்:

புத்தூர் வடிகால் வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு எற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தூர் வடிகால் வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரிலிருந்து திருமயிலாடி,கொப்பியம்,மாதானம் வழியாக புதுப்பட்டினம் செல்லும் சாலையின் ஓரம் வடிகால் வாய்க்கால் உள்ளது.

புத்தூர் கடைவீதியை ஒட்டி உள்ள இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன.

சுகாதார சீர்கேடு

இதனால் வாய்க்காலில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தேங்கியுள்ள தண்ணீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.எனவே வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை குப்பை கூடைகள் வைத்து சேகரித்து உரிய இடத்துக்கு எடுத்துச்சென்று அழிக்க வேண்டும். ஆனால் குப்பைகள் சேகரிப்பதற்காக குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் சாலையோரம் மற்றும் வியாபார கடைகள் ஓரம் அவை குவிந்து கிடக்கின்றன. காற்று பலமாக வீசும்போது இந்த குப்பைகள் பறந்து சென்று தண்ணீரில் விழுந்து வருகிறது.

மேலும் சிலரால் குப்பைகளை வாய்க்காலில் உள்ள தேங்கிய நீரில் நேரடியாக கொட்டப்படுகிறது. எனவே ஊராட்சிகள் சார்பில் அப்பகுதியில் உரிய இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வாய்க்காலை சுத்தம் செய்து எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்