மயானத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
மயானத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
பொள்ளாச்சி
மயானத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அங்கன்வாடி கட்டிடம்
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் தெற்கு உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. இதற்கு ஜமாபந்தி அதிகாரியான சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
அப்போது நஞ்சேகவுண்டன்புதூர் வக்கீல் இமயவரம்பன் என்பவர் கொடுத்த மனுவில், நஞ்சேகவுண்டன்புதூரில் இருந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த கட்டிட மும் இடிந்து விழும் நிலையில், முட்புதர்கள் சூழ்ந்து உள்ளது.
இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மயானத்தில் கழிவுகள்
குஞ்சிபாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில், குஞ்சிபாளையத்தில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். யாராவது இறந்தால் உடலை அடக்கம் செய்ய மேற்கு பகுதியில் சுடுகாடு உள்ளது.
இந்த நிலையில் ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி சீனிவாசபுரம், வசியாபுரம், காளிபாளையம், காந்தி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து மயானத்தில் கொட்டப்படுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இன்று பெரியநெகமம்
ஜமாபந்தியில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 142 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 30 மனுக்க ளுக்கு தீர்வு காணப்பட்டன.
இன்று (புதன்கிழமை) பெரிய நெகமம் உள்வட்டத்துக்கு உட் பட்ட கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனூர், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம் பட்டி, ஆ.நாகூர், போளிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிபட்டி பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறு கிறது.