கோரையாற்றில் மணல் அள்ளியவர் கைது; டிராக்டர் பறிமுதல்
கோரையாற்றில் மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விராலிமலை தாலுகா ராஜாளிபட்டி பகுதியில் உள்ள கோரையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் விராலிமலை- மணப்பாறை சாலை ராஜாளிபட்டி பூசாரி குளம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கோரையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிராக்டரின் உரிமையாளரும், டிரைவருமான பசுக்காரன்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.