பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூரில் கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம்
பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூரில் கவர்னர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகேஉள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலுக்கு பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய மணிப்பூர் மாநில கவர்னருமான இல.கணேசன் வருகை தந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்தார். பிள்ளையார்பட்டி அறங்காவலர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தரிசனம் முடித்த அவர் அங்கிருந்து திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன், திருக்கோஷ்டியூர் பாண்டியராஜன் ஆகியோர் நினைவுப பரிசு வழங்கினர். இதில் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்.