கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

கனமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-03 16:54 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சித்தார் கோட்டை, புதுவலசை, தேர்போகி, பழைய தேர் போகி, பனைக்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் கோப்பேரி மடம் பகுதியில் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் இருந்த உப்பள பாத்திகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கின. மழை நீரில் உப்பு கரைந்து வீணாவதை தடுக்க தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு உள்ளது. பருவமழை சீசன் தொடங்கி விட்டதால் இன்னும் 3 மாதத்திற்கு கோப்பேரி மடம், திருப்புல்லாணி, ஆனைகுடி, வாலிநோக்கம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்