மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.1¼ கோடி விளைபொருட்கள் விற்பனை

அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தையில் ரூ.1.38 கோடிக்கு வேளாண்விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

Update: 2023-09-01 20:30 GMT


அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தையில் ரூ.1.38 கோடிக்கு வேளாண்விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

விற்பனை சந்தை

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விவசாயிகள் பயன்பெறும் வகையில் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடமானது மத்திய அரசின் மின்னணு தேசிய வேளாண் விற்பனைச் சந்தையுடன் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் இணைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விளை பொருள்களை இங்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் மூலம் விளை பொருட்களை தேசிய அளவில் சந்தைப்படுத்தி விவசாயிகள் நியாயமான விலை பெறவும் வியாபாரிகள் தரமான பொருட்களை தேர்வு செய்து கொள்முதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பதிவு

இங்கு ஒழுங்குபடுத்திய சந்தை, வெளிப்படையான பரிவர்த்தனை, மின்னணு எடை, அதிக வியாபாரிகள் பங்கேற்பு, நியாயமான விலை கிடைப்பது போன்ற வசதிகளை பெற முடியும். மேலும் விளை பொருட்களை குறைந்த வாடகையில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதி உள்ளதால் பொருளீட்டுக்கடன் வசதிகளை விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.

அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இதுவரை 325 விவசாயிகள் மற்றும் 20 வியாபாரிகள் இ-நாம் திட்டத்தின் கீழ் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

ரூ.1.38 கோடிக்கு விற்பனை

கடந்த 27-ந்் தேதி முதல் 31-ந் தேதி வரை அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் 534.8 டன் எடையுள்ள மக்காச்சோளம், சோளம், நெல், சூரியகாந்தி விதை, குதிரை வாலி, நிலக்கடலை போன்ற விளை பொருட்களை ரூ.1.38 கோடிக்கு 48 விவசாயிகள் விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.

பண்ணைவணிகம் மூலம் 29.43 டன் அளவில் விளை பொருட்கள் ரூ6.58 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே அருப்புக்கோட்டை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது விவரங்களை பதிவு செய்திடவும் இ-நாம் வர்த்தகம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் விளை பொருட்களை விற்பனை செய்யவும், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை 82483 69001 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்