சேலம் தனபால் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேலம் தனபால் மீண்டும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேலம் தனபால் மீண்டும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கோடநாடு கொலை வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தடயத்தை அழிக்க முயன்றதாக கார் டிரைவர் கனகராஜ் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மறு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
தனபாலிடம் விசாரணை
இதையடுத்து அவர் கடந்த 14-ந் தேதி கோவையில் உள்ள சி.பி.சி. ஐ.டி. போலீசில் ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசார ணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். அதற்கு தனபால் பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்ப தால் 26-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறி அவரை போலீ சார் அனுப்பி வைத்தனர். அதன்படி தனபால் நேற்று காலை 10 மணிக்கு கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் 2-வது முறையாக ஆஜரானார்.
மீண்டும் ஆஜர்
அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பல கிடுக்கிப்படி கேள்விகளையும் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார். அவரிடம் போலீசார் கேட்ட கேள்விகளையும், அதற்கு அவர் பதில் அளித்ததையும் போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.
பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அவரிடம் விசாரணை முடிந்தது. 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் தனபால் அளித்த பதிலின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
40 கேள்விகள்
முன்னதாக விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு தனபால் நிரு பர்களிடம் கூறும்போது, இந்த மாதம் 14-ந் தேதி நான் விசார ணைக்கு இங்கு வந்தேன். அப்போது என்னிடம் 40-க்கும் மேற் பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு நான் தெளிவாக, சரியான பதிலை அளித்தேன். எனது தம்பி கனகராஜ் எடுத்து வந்த முக்கியமான பைகளை அவர் யாரிடம் கொடுத்தார் என்பது குறித்தும் நான் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் தெரிவித்து உள்ளேன் என்றார்.