இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-11 19:22 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளிசந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு இன்று (புதன்கிழமை) முதல் குறைந்தவிலையில் அண்ணாநகர், கே.கே.நகர் உழவர்சந்தைகளிலும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் மன்னார்புரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனை நிலையம் ஆகிய இடங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் தக்காளி வாங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்